திருப்பாணாழ்வார் பாசுரங்களில் அரங்கப்பெருமானின் திருவுருவ வருணனைகள்
Synopsis
பக்தி இலக்கியம் சைவ> வைணவ சமயங்களை முன்னிறுத்தி எழுந்தது. சைவ சமயத்தில் திருமுறைகளும். வைணவ சமயத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் பக்தி இலக்கியத்தின் முக்கியப் பகுதிகளாகும். இவ்விலக்கியங்கள் சமூகப்பார்வையை பிரதிபலித்ததோடு அக்கால கட்டத்தின் சமய> சமூக அரசியல் நிலைகளை வெளிப்படுத்தியது. அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். பத்து பாசுரங்களைக் கொண்ட இப்பதிகம் திருவரங்கத்துப் பெருமானை மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டது. திருவரங்கப் பெருமானின் திருமேனி அழகில் மெய்மறந்து பாடியருளியதாகும். அரங்கனின் திருவடியில் தொடங்கி> தலை வரை உள்ள அங்கஅவய உறுப்புக்களின் வடிவழகையும்> குணவழகையும் அற்புதமாகக் காட்சியளிக்கும் விதமாக இப்பாசுரங்கள் அமைகின்றது.
Pages
48-52
Published
September 17, 2025
Series
Online ISSN
2456-5148
Copyright (c) 2025 KALANJIYAM
How to Cite
திருப்பாணாழ்வார் பாசுரங்களில் அரங்கப்பெருமானின் திருவுருவ வருணனைகள். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 48-52). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/11