திருநாவுக்கரசரின் சைவ நெறியும் சமயத் தொண்டும்
Synopsis
சைவத்தைத் தலைக்கச் செய்யும் நூல்கள் பன்னிரு திருமுறைகள் ஆகும் இவற்றில் மூவர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் அருளிச் செய்யப்பட்ட திருப்பதிகங்கள் தேவார திருமுறைகள் என வழங்கப்படும் அவை முதல் ஏழு திருமுறைகள் ஆகும் இவர்களுள் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருப்பதிகம் நான்கு, ஐந்து, ஆறு ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன இவற்றில் 113 திருப்பதிகங்கள் நான்காம் திருமுறையாகவும் 100 திருப்பதிகங்கள் ஐந்தாம் திருமுறையாகவும் 99 திருப்பதிகங்கள் ஆறாம் திருமுறைகளாகவும் பகுக்கப்பட்டுள்ளன.நாயனார் பாடியருளிய 312 திருப்பதிகங்கள் 126 திருத்தலங்களை பற்றி பாடியனவாகும். இதில் 37 பொதுப்பதிகங்களும் அமையும். உழவார திருப்பணி செய்தும் இறைவனுக்கு மலர் பறித்து திருப்பதிகங்களை அருளி செய்து இறைவனை ஏத்தியும் விளங்கியவர். இவரது திருப்பதிகங்கள் ஆழ்ந்த கருத்துக்களும் உள்ளத்தை நெகிழச்செய்யும் பக்தி உணர்வும் மக்களுக்கு ஏற்ற சீரிய உபதேசங்களும் கொண்டு விளங்குகின்ற சமூக சிந்தனைகள் மிகுந்தவை ஆகும்.