மாணிக்கவாசகர் பாடலில் - ‘நாய்’
Synopsis
அக இலக்கியங்களிலும், புற இலக்கியங்களிலும் பயின்று வரும் உவமைகளை சுவைப்பதற்கு பக்தி இலக்கியங்களில் வரும் உவமைகளை சுவைப்பதற்கும் தனித்தனியான மனநிலையும் புலமையும் வேண்டும். புலவனுடைய அறிவையும் அவன் பார்க்கும் உலகத்தினையும் பார்க்கும் திறத்தையும் அழகியலையும் முன்னுறுத்தியே உவமைகள் அமைக்கப்படுகின்றன.
பக்தி இலக்கியத்தில் நிலையாமையை நோக்கிய வாழ்வியல் அனுபவங்கள் வெளிப்படுவதால் அழகியலை விட உணர்வுகளை மிகுதியாக தெரிகின்றன. சைவ சமயமானாலும், வைணவ சமயமானாலும் ஆண்டவன் அடியார் என்னும் நிலையில் பாடப்படுகின்ற பாடலில் எடுத்தாளப்படும் உவமைகள் பரம்பொருளை நோக்கியே மனதினை பக்குவப்படுத்துவனாக உள்ளன. இறைவனை அடையும் தகுதியினை பெற்ற மாணிக்கவாசகர் தன்னை தாழ்த்திக் கொண்டு பாடும் முறையும் பயன்படுத்தும் உவமைகளும் தனி மனிதனையும் சமுதாயத்தையும் நன்னெறி படுத்துகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இலக்கியத்தை அழகுப்படுத்தும் உவமையே வாழ்க்கையினையும் நெறிப்படுத்துகின்றன.