திருமந்திரத்தில் அணுக்கூறுகள்
Synopsis
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. அணு குறித்த அறிவியல் ஆர்வம், ஆய்வு என்பது சில நூறு வருடங்களுக்கு முன்பு தான் தோன்றியது.ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திருமந்திரத்தில் சித்தர்களின் கூடுவிட்டு கூடுபாய்தல் சிறிய உருவத்தை பெரிய உருவமாக்குதல் >பெரிய உருவத்தை சிறிய உருவமாக்குதல் போன்ற அட்டமாசித்துகள்இடம்பெற்றிருப்பது வியப்பளிக்கின்றது.யோகப்பயிற்சியால் ஒளிப்புகும் பொருளாக மாற்றினால் கண்ணுக்குப் புலனாகா வடிவை பெறமுடியும் என்ற செய்தியும்> சோதனைக் குழாயில் செயற்கை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையும், தத்துவ அறிவும்> தியானமும் உள்ளவர்கள் காற்றின் இயல்பையும் அதன் ஆற்றலையும் அறிவர்.அத்தகைய தத்துவ அறிவால் மரணத்தை வெல்ல முடியும் என்ற யோகவியல் தத்துவத்தையும் மும்மலங்களும் நீங்கப் பெற்று அனைத்திற்கும் மேலாக தானாகவே இருக்கின்ற பரம்பொருளை தரிசித்து அதை தமக்குள்ளேயே உணர்ந்திருப்பவர்களே சித்தாந்தர்கள் என்ற கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.
பிரதான சொற்பதங்கள்: பக்தி இலக்கியம், திருமந்திரம், பத்தாம் திருமுறை