திருஞானசம்பந்தர் கண்ட இயற்கைக் காட்சிகள்
Synopsis
தமிழ் இலக்கிய உலகிற்குச் சமயங்களின் கொடை மிகுதியானதாகும். ஏறத்தாழ கி.பி. 600 முதல் கி.பி. 900 வரையிலான முன்னூறு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பக்தி இயக்கம் முழுவீச்சில் நிலை கொண்டிருந்தது. அக்கால கட்டத்தில் சைவ சமயமும், வைணவ சமயமும் புதுப்பொலிவுப் பெற்றுச் சிறந்து விளங்கின. இப்பெருமை மிகு பணியினைத் துவக்கி வைத்தவர் திருஞானசம்பந்தர் ஆவார். ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து சென்று பல்வேறு சிவாலயங்களை வணங்கி அவற்றின் சிறப்புகளையும் அங்கு உறையும் சிவபெருமானின் அருள் திறத்தையும் பாடியுள்ளார். ஞானசம்பந்தர் தாம் பாடிய தேவாரத்தில் இயற்கைக் காட்சிகளாக நீர், மலை, கடல், தடாகம், சோலை, இடி, மின்னல், நிலவு, மழை, திருமேனி என்ற பெயரில் இங்கு விளக்கப்படுகின்றது.
பிரதான சொற்பதங்கள்: தேன் ஆர்ந்து- தேன் நிறைந்து, கதலி- வாழை, மகவு- குட்டி, கோலம்- அழகு, காவி- கருங்குவளை, கழுமலம்- சீர்காழி, வாவி- குளம்