திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள்
Synopsis
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் தற்போது உள்ள சமுதாயத்திற்கு திருமூலர் தன் பாடல் மூலம் விரித்துக் கூறுகிறார். அன்பு என்பது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வளரும் தன்மை உடையது. ஒழுக்கத்தை உயிருக்கு நிகராக போற்றப்பட வேண்டும் என்று சுட்டுகின்றார். ஈகையை பல நிலைகளில் உரைக்கின்றார் பொருளாகவும் ,உணவாகவும் ,உடையாகவும் ,பொன்னாகவும் ஈகை புரிய பிறருக்கு நலம் உண்டாகும் .இதனால் அறம் வளரும் என்கிறார் திருமூலர் பிறன் மனைவியை நோக்காத சான்றோருக்கு அறம் மட்டுமன்று நிறைந்த ஒழுக்கமாகும். கொடுக்கக் கொடுக்க வற்றாத செல்வம் கல்வி கல்வியோடு சேர்ந்து கலாச்சாரம் ,பண்பாடு , மனிதநேயம் முதலியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் உலக மக்களுக்காக வழங்கிய வாழ்வியல் சிந்தனைகள் போற்றுதற்குறியதாகும்.
அருஞ்சொற்பொருள்: யாக்கை – உடல், உண்டி - உணவு, ஞாலம்– உலகம், மருங்கு - பக்கம், தெவ்வர் - பகைவர்